அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது குறித்து, அஜித் குமார் ரேசிங் அணியின் வீரரான ஃபேபியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Jan 08, 2025
Hindustan Times Tamil
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘முதல் பயிற்சி நிறைவு பெற்றது; அஜித் நலமுடன் இருக்கிறார்;
அவர் உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லை. அதுதான் இங்கு மிக முக்கியமானது.
பயணத்தில் கற்றுக்கொள்ளல் என்பது, எப்போது முடியாது என்பதை இந்தச்சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தி இருக்கிறது;
இது பின்னடைவு கிடையாது; ரேசிங்கின் மீது எங்களுக்குள்ள ஆர்வம் எங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தில் இருந்து எங்களை கற்றுக்கொள்ள வைக்கிறது; மேம்படுத்துகிறது..
சாலையில் இன்னும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறன; நாங்கள் அணியாக, குடும்பமாக அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
உங்கள் முகத்தில் பருக்கள் வருகிறதா? இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்!