உண்மையில் என் கணவர் ராகுல் எனக்கு ஒரு நல்ல நண்பர். பள்ளிக்காலத்தில் இருந்தே அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.
By Kalyani Pandiyan S Oct 26, 2024
Hindustan Times Tamil
அவருக்கு சினிமா, கிளாமர், புகழ் உள்ளிட்ட விஷயங்களிலெல்லாம் பெரிதாக ஈடுபாடு கிடையாது. அவர் எப்போதும் வாழ்க்கையை யதார்த்தத்தோடு பார்ப்பவர்.
நான்தான் அவ்வப்போது, நாம் ஒரு ஹீரோயின் என்ற ஆகாயத்தில் மிதந்து கொண்டிருப்பேன். அந்த சமயத்தில் அவர் என்னிடம், சற்று கீழே வாருங்கள் உலகம் வேறு மாதிரியானது என்பதை ஞாபகப்படுத்துவார்.
அது உண்மையில் எனக்கு தேவையும் பட்டது வெவ்வேறு மாற்று சிந்தனை கொண்ட நபர்கள் வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையும் பொழுது, அது மிகவும் நன்றாக இருக்கும். அது என் விஷயத்தில் நடக்கவும் செய்திருக்கிறது.
அவர் மிக மிக பாதுகாப்பான மனிதர். அதை ஏன் சொல்கிறேன் என்றால், வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது எனக்கு தான் அதிகமான அட்ராக்ட்க்ஷன் வரும்.
என்னிடம் மக்கள் நெருங்கி பேசுவார்கள். போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அதை எல்லாம் அவர் எந்த விதத்திலும் அசௌகரியமாக உணர்ந்ததே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்தான் என்னுடைய முதல் மிகப்பெரிய ரசிகன்.
-அபிராமி பேட்டி!
உடல் எடையை குறைக்க வேண்டுமா.. ஆப்பிள் பழத்தை மறக்காதீங்க!