தாடி அல்லது கட்டுக்கடங்காத தாடி வளர்ச்சி என்பது பல ஆண்களுக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்னை. ஆனால் இதற்கு தீர்வு இருக்கிறது. இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமாக தாடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்

By Stalin Navaneethakrishnan
Sep 19, 2023

Hindustan Times
Tamil

பயிர்ட் ஆயில்கள் எனப்படும் தாடியை வளர்க்கும் எண்ணெய்கள் உள்ளன. ரெடென்சில் மற்றும் டிஹெச்டி பூஸ்டர்கள் போன்ற எண்ணெய்கள் தாடிகளுக்கு இடையில் விட்டுப்போகும் இடங்களில் தாடி முடி வளர உதவுகின்றன

உங்கள் முகம் மற்றும் தாடி வகைக்கு ஏற்ப எண்ணெய் தேர்வு செய்யலாம். இதற்கு ஒரு நிபுணரை அணுகி சரியான எண்ணெயை நீங்கள் தேர்ந்தெடுப்பது அவசியம்

முடி வளர்ச்சியில் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான தாடியை பெற, ஒருவர் எண்ணெய் உணவுகள், கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை மற்றும் ஜங்க் ஃபுட்ஸ் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்

வைட்டமின்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். ஆரோக்கியமான தாடி வளர்ச்சியை ஊக்குவிக்க பச்சை காய்கறிகள், பால், முட்டை மற்றும் முழு தானியங்களின் சீரான உணவு அவசியம்

வழக்கமான சரும பொலிவுக்கு செய்யும் ஃபேஷியல் மற்றும் இயற்கையான சரும பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை அடையலாம்

வாரத்திற்கு ஒருமுறை எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் முகத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த சரும செல்களை அகற்றலாம். இதன் மூலம் முகத்தை சுத்தம் செய்து புத்துணர்ச்சி பெறலாம்

இது தாடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இறந்த சரும செல்களை அகற்றுவது சிறந்தது

ஒட்டுத் தாடிக்கு ஏற்ற பல தாடி பாணிகள் உள்ளன. உங்கள் முடி வளர்ச்சி மற்றும் முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப தாடி ஸ்டைலை நீங்கள் தேர்வு செய்யலாம்

முழு தாடி வளர ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது மிகவும் முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock