மது குடிப்பவர்கள் மறக்கவே கூடாத 8 முக்கிய விஷயங்கள்!

By Pandeeswari Gurusamy
Apr 17, 2024

Hindustan Times
Tamil

மருத்துவ வல்லுநர்கள் பொதுவாக மது அருந்துவதை ஆண்களுக்கு இரண்டு சிறிய பானங்கள் மற்றும் பெண்களுக்கு 1 சிறிய பானம் என்று வரையறை செய்கின்றனர். ஒரு சிறிய பானம் என்பது ஒரு அவுன்ஸ். அதாவது 30 மி.லி. மட்டுமே. இருப்பினும், மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டு பலரும் மது அருந்துகின்றனர். ஆனால் அதிகமாக மது அருந்தினால் ஆயுள் தீர்ந்துவிடும்.

Pexels

சிலர் வெறும் வயிற்றில் உணவு இல்லாமல் மது அருந்துவார்கள். இது மிகவும் அபாயகரமானது. இப்படிச் செய்வதால் உங்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்து, அடுத்த நாள் உங்களுக்கு ஹேங்ஓவர் ஏற்படும். இரைப்பை பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். மது அருந்துவதற்கு முன்பாக கொஞ்சமாக ஏதாவது சாப்பிடுவது நல்லது. சிலருக்கு சாப்பிட்டுவிட்டால் குடிக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அது மன பிரம்மைதான் எனவே குறைந்தபட்சம் ஒரு ஆஃப் பாயில் அல்லது சிறிது பழத்துண்டுகள் சாப்பிடலாம்.

Pexels

மிக வேகமாக மது அருந்த வேண்டாம். மிக முக்கியமாக, உங்கள் முதல் பானத்தை மிக மெதுவாக எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஏதேனும் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு மெது மெதுவாக பருகவும். காணாததைக் கண்டது போல குடித்தால் மது உங்களை கபளிகரம் செய்துவிடும்.

Pexels

புகைப்பிடிப்பவர்கள் மது அருந்தும்போது சும்மா இருக்கத் தோன்றாது. மது அருந்துபவராக இருந்தால் புகைபிடிப்பதை நிறுத்துங்கள். இல்லையெனில் நீங்கள் மது அருந்தும்போது புகைபிடிக்கும் அளவு அதிகரிக்கும். இதனால் உங்கள் கல்லீரலுடன், நுரையீரலும் சேர்ந்து சேதமடையலாம்.

Pexels

பிரச்னை இல்லாத வாழ்க்கை யாருக்கு இருக்கிறது சொல்லுங்கள்? அவமானமோ, தோல்வியோ, மன உளைச்சலோ மது இதற்கு தீர்வல்ல அல்ல. குடித்தால் நஷ்டம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்தான், உங்களை காயப்படுத்துபவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

Pexels

சிலர் வெவ்வேறு வகையான ஆல்கஹால்களை காக்டெயில் என்ற பெயரில் கலக்கிறார்கள். வெவ்வேறு முறைகளால் தயாரிக்கப்பட்ட ஆல்கஹால்களை தனித்தனியாக அருந்த வேண்டும். பீருடன் விஸ்கியை குடித்தல், ரம் பிளஸ் ஓட்கா, பிராந்தி பிளஸ் விஸ்கி எனக் கலந்து கட்டி குடிப்பது தவறானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு வகையான விளைவுகள் உள்ளன. எனவே காக்டெயிலை தவிர்க்க வேண்டும். காக்டெயில் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். செரிமான அமைப்பு தலைகீழாக மாறும்.

Pexels

நீங்கள் குடித்த பிறகு உங்களுக்கு நீங்களே கேட்க மாட்டீர்கள். பின்னர் உங்கள் வாகனம் ஏன் கேட்கப் போகிறது? குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல. விபத்துகள் ஏற்பட்டு உயிரை இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்களைச் சார்ந்தவர்கள் உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

Pexels

இது குடிகாரர்கள் செய்யும் பொதுவான தவறு. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக முடிவெடுத்து குடிக்கும் போது வழக்கமான மருந்துகளை சாப்பிடாமல் விட்டுவிடுகின்றனர்.

Pexels

 குடித்தால் மருந்துகள் வேலைசெய்யாது என்ற தவறான மனப்போக்கு தான் காரணம். அப்படி சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுங்கள்.

Pexels

பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்