கிராம்பு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 04, 2025

Hindustan Times
Tamil

ஒவ்வொரு வீடுகளின் கிச்சனிலும் தவறாமல் இருக்கும் மருத்துவ குணம் மிக்க பொருளாக கிராம்பு இருந்து வருகிறது

நறுமணம் மிக்கதாக இருக்கும் கிராம்பு ஆயுர்வேதத்தில் மருத்துவம் மிக்க பொருளாக பார்க்கப்படுகிறது

கிராம்பில் உள்ள யூஜெனால் என்று பொருள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன், மூட்டுவலி மற்றும் சுவாச பிரச்சினைகளை போக்க உதவுகிறது 

வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. ஈறு நோய், பல்வலி மற்றும் வாய் துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிக்கிறது

செரிமான நொதி உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது

இதில் இருக்கும் யூஜெனால் பல்வலி, தலைவலி, தசை வலிகளில் இருந்து ஆற்றுப்படுத்துகிறது

சுவாசப்பாதையில் இருக்கும் சளி அடைப்பை நீக்குகிறது. இருமல், சளி, ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்கிறது

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ப்ரீ ரேடிக்கல்கள் பாதிப்பில் இருந்து தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

ஆன்டிசெப்டிக் போல் செயல்படும் கிராம்பு, பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது 

நெல்லிக்காயில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றுங்கள் உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன

pixabay