தயிர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 03, 2024
Hindustan Times Tamil
ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக இருந்து வரும் தயிர் புரொபயாடிக்குகள் நிறைந்ததாக உள்ளது. செரிமானத்துக்கு நன்மை தருவது முதல் இதய ஆரோக்கியத்தை பேனி காப்பது வரை தயிரில் ஏராளமான நன்மகள் இருக்கின்றன
தயிரில் இருக்கும் புரொபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் பாக்டீரியாவாக உள்ளது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை அமில வீச்சு, அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளை ஆற்றுப்படுத்துகிறது
அதிக புரதம் நிறைந்து காணப்படும் தயிர் குறைவான கலோரிகளை கொண்டிருப்பதால் எடை குறைப்புக்கு உதவுகிறது. தயிர் சாப்பிட்ட பின்னர் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதால் அடிக்கடி சாப்பிடுவது தடுக்கப்படுகிறது
தயிரில் இருக்கும் புரதம். கால்சியம், பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. வயதானவர்களுக்கு கீழ்வாதம் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது
தயிரில் இருக்கும் புரொபயாடிக்குகள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது. அதிக கொல்ட்ரால், அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது
தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின்களான பி12 மற்றும் டி ஆற்றல் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகித்து ஒட்டு மொத்த உடல் நலத்தை பேனி பாதுகாக்கிறது. தொடர்ச்சியாக தயிர் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்பெறும்
தயிர் சாப்பிடுவதால் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, டைப் 2 டயபிடிஸ் பாதிப்பின் ஆபத்தை குறைப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறைவான க்ளைசெமிக் குறியீடு இருப்பதால் டயபிடிஸ் நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ளது
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்