நின்று கொண்டே தூங்கும் 7 விலங்குகள்
By Suguna Devi P
Jan 27, 2025
Hindustan Times
Tamil
சில விலங்குகள் நின்று கொண்டே தூங்குகின்றன என்று தெரியுமா? நின்று கொண்டே தூங்கும் 7 விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
நின்று கொண்டே தூங்கும் விலங்குகளில் குதிரை பிரபலமானது. ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக ஓடத் தயாராக இருக்க குதிரைகள் இதைச் செய்கின்றன.
காட்டெருமை காட்டில் இருக்கும்போது நின்று கொண்டே தூங்கும். காட்டில் பாதுகாப்பாக இருக்க இந்த தந்திரத்தை அது செய்கிறது.
வரிக்குதிரைகள் நின்றுக்கொண்டே தூங்குகின்றன, அவை வேகமாக ஓடவும் தப்பிக்கவும் இந்த தூக்கம் உதவுகின்றது.
யானைகளும் அசையாமல் நின்று உறங்குகின்றன. ஆனால் ஆழ்ந்த ஓய்வு தேவைப்படும்போது மட்டுமே யானைகள் கீழே படுத்து தூங்குகின்றன.
மாடுகள் வழக்கமாக ஓய்வெடுக்கும் போது மட்டுமே தரையில் தூங்குகின்றன. இல்லையெனில், மாடுகள் நின்று கொண்டே தூங்கும்.
ஒட்டகச்சிவிங்கிகள் நின்று கொண்டே தூங்குகின்றன. குறுகிய காலத்திற்கு தூங்கும் விலங்குகளில் இதுவும் ஒன்றாகும்.
ஃபிளமிங்கோ என்பது ஒற்றைக் காலில் தூங்கும் பறவை. இது வலிமை மற்றும் சமநிலையை பராமரிக்க ஒரு தனித்துவமான வழியாகும்.
உங்கள் செல்லப்பிராணியான நாயை சிரமமின்றி பயிற்றுவிக்க அதற்கான எளிய தந்திரங்கள் குறித்து பார்ப்போம். இப்படி முயற்சி செய்தால் வழிக்கு வந்துவிடும்!
Photo Credit: Pexels
க்ளிக் செய்யவும்