உடலை பிட்டாகவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 6-6-6 வாக்கிங் பயிற்சியை வழக்கமாக்கி கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 05, 2025

Hindustan Times
Tamil

இந்த எளிமையான நடைப்பயிற்சி சிறந்த ஒர்க்அவுட்டாக இருப்பதுடன் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கும்

6-6-6 வாக்கிங் பயிற்சி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் தினமும் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதை காலை 6 மணி அல்லது மாலை 6 மணி என மேற்கொள்ளலாம். இந்த நேரத்தில் 6 நிமிட வார்ம் அப் அல்லது கூல் டவுன் பயிற்சியை செய்வதன் மூலம் முழு பலனை பெறலாம்

காலை 6 மணி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

உங்களது நாளை நடைப்பயிற்சியுடன் தொடங்கினால் வளர்சிதை மாற்றம் மேம்படுவதுடன், அதிக கலோரிகள் எரிக்கப்படும். அத்துடன் மனஅழுத்தம், கவலையை போக்கவும் உதவுகிறது

மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

மாலை 6 மணிப்பொழுதில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் மற்றும் மனநல ஆரோக்கியம் நலம் பெறும். செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிறு உப்புசம் ஆவதை குறிக்கிறது. தூக்கத்தின் தரம் அதிகரிக்கும். ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

ஒரு நாளில் 60 நிமிடங்கள் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் 60 நிமிடம் வரை நடைப்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியம் பலப்படும். உடல் எடையும் சரியாக நிர்வகிக்கலாம்

6 நிமிட வார்ம் அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

இந்த குறுகிய நேர வார்ம் அப் உங்கள் இதய துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரித்து தசைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.  இதனால் நெகிழ்வுத்தன்மை, உடல் ஒருங்கிணைப்பு ஏற்படும்

6 நிமிட கூல் டவுன் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

இந்த குறுகிய நேர பயிற்சி உடல் ஆற்றுப்படுத்தி, உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. அத்துடன் உடலில், தசைகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, தசை அசெளகரியம் மற்றும் விறைப்பு தன்மை ஏற்படுவது தடுக்கப்படுகிறது 

விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?