தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 01, 2024
Hindustan Times Tamil
அன்றாடம் நாம் பருகவேண்டிய பானங்களில் முக்கியமான பானமாக ஆரஞ்சு ஜூஸ் இருந்து வருகிறது. இது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் பல்வேறு நன்மைகளை பெற உதவுகிறது
பார்வைத்திறன் மேம்பாடு, சருமத்தை பளபளப்பு ஆக்குவது வரை ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
உடற் பயிற்சி செய்த பின்னரோ அல்லது வெயில் போன்ற சூடான வெப்பநிலை சூழ்நிலைகளில் உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலின் செயல்பாடுகள் சீராக செயல்படுகிறது
ஆரஞ்சு ஜூஸ்களில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் சி பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது. கண்புரை பாதிப்பு, மாகுலர் சிதைவு போன்ற கண் சார்ந்த நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது
ஆரஞ்சு ஜூஸ்களில் இடம்பிடித்திருக்கும் இயற்கையான சர்க்கரை உடல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. எனவே காலை நேரத்தில் உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்ள ஆரஞ்சு ஜூஸ் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளலாம்
கொலஜன் உற்பத்திக்கு அடிப்படையாக வைட்டமின் சி இருக்கிறது. இது சருமத்தில் நெகிழ்வுதன்மை ஏற்படுத்துகிறது. எனவே ஆரஞ்சு ஜூஸ் அடிக்கடி பருகுவதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் மறைந்து, சருமத்தின் தொனி மேம்படுகிறது
ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பை அமைப்பை மேம்படுத்துகிறது. எனவே பல்வேறு நோய் பாதிப்புகள், உடல் நல கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது
வைட்டமின் சி மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது ஆராய்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே ஆரஞ்சு ஜூஸ் பருகுவது மனஅழுதத்தை போக்கி மனநிலை மாற்றத்தை மேம்படுத்துகிறது
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்