அரிசி கலந்த தண்ணீர் சரும அழகை பேனி காக்க எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 05, 2025

Hindustan Times
Tamil

அரிசி கலந்த தண்ணீர் இயற்கை சரும பராமரிப்பாளராக உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது

உங்கள் முகத்துக்கு டோனராக பயன்படுத்தலாம்

முகத்தை நன்கு கழுவிய பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து அரிச தண்ணீரை அப்ளை செய்யலாம். இவ்வாறு செய்வதால் சருமத்தின் துளைகளை இறுக்கமாக்கி, PHஐ சமநிலைப்படுத்தி, உங்கள் புத்துணர்ச்சியாக்குகிறது

இயற்கை பேஸ் மாஸ்க்

அரிசி தண்ணீருடன் தேன் அல்லது மஞ்சள் கலந்து ஹைட்ரேட்டிங் பேஸ் மாஸ்கை உருவாக்கிவிடலாம். முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்தவுடன் சருமத்தை ஈரப்பதமாக்கி பொலிவை ஏற்படுத்தும்

இறந்த சரும செல்களை நீக்கும் ஸ்கரப் ஆக பயன்படுத்தலாம்

அரிசி நீரை ஓட்ஸ் உடன் கலக்கி மிருதுவான ஸ்கரப் ஆக பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் இரந்த செல்களை நீக்கி மென்மையாகவும், மிருதுவாகவும் மாற வைக்கும்

சருமத்தின் ஈரப்பத்ததை தக்க வைக்கும் ஃபேஸ் மிஸ்ட் ஆக பயன்படுத்தலாம்

அரிசி தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டில் சேமித்து வைத்து, அவ்வப்போது ஸ்ப்ரே செய்து நாள் முழுவதும் சருமத்தை ஈரப்பதத்துடன் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம். சரும எரிச்சல் இருப்பவர்களுக்கு சிறப்பான தீர்வாக இருக்கும்

கண்களுக்கு கீழ் பகுதியில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்

குளிர்ச்சியான அரிசி தண்ணீரில்  காட்டன் துணியை ஊற வைத்து கண்களின் கீழ் பகுதியில் 10 முதல் 15 நிமிடம் வரை வைக்க வேண்டும். இது கண்களில் ஏற்படும் கருவளையம், வீக்கம் ஆகியவற்றை குறைக்கும்

உங்கள் உறவு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டும் 6 அறிகுறிகள்