தேனுடன் தப்பி தவறியும் சேர்ந்து சாப்பிடக்கூடாத உணவு பொருள்கள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 01, 2024
Hindustan Times Tamil
தேன் இயற்கையான இனிப்பான் ஆகவும், ஆரோக்கிய அமுதமாகவும் திகழ்கிறது. சமையலிலும், மருத்துவத்திலும் தேன் பயன்பாடு இன்றியமையததாக உள்ளது
சில உணவு பொருள்களுடன் தேன் இணைந்து சாப்பிடுவதால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. அதன் ஊட்டச்சத்து அளவிலும் தாக்கம் இருக்கும்
தேன் மற்றும் பூண்டு என இரண்டிலும் நுண்ணுயிருக்கு எதிரான பண்புகள் இருப்பதால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் செரிமான பிரச்னை, இரைப்பை செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும்
தேன், வெள்ளரி என இரண்டும் எதிர் எதிர் விளைவுகளை கொண்டுள்ளன. தேன் உடலுக்கு கதகதப்பையும், வெள்ளரி குளிர்ச்சியையும் தருகிறது. எனவே இவை இரண்டையும் இணைந்து சாப்பிட்டால் சமநிலையின்மை ஏற்படு செரிமான பிரச்னை உருவாகும்
கடுகுடன், தேன் இணைந்து சாப்பிட்டாலும் உடலில் சமநிலை இன்மை ஏற்படக்கூடும். இதனால் செரிமானத்தில் பாதிப்பு உண்டாகலாம்
நெய், வெண்ணெய் போன்றவற்றுடன் தேன் இணைந்து சாப்பிடுவது செரிமானத்தை கடினமாக்கும். எனவே வயிறு தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த காம்போ பாதிப்பை ஏற்படுத்தும்
மது மற்றும் புளித்த பானங்களுடன் தேன் இணைப்பது அபாயகரமான கலவையாக கருதப்படுகிறது. பல்வேறு உடல்நல கோளாறுகளை இவை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த கலவையை தவிர்க்கவும்
புத்தாண்டில் கோடிகளை குவிக்க போகும் ரிஷபம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!