நரம்பு மண்டல அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 11, 2024

Hindustan Times
Tamil

நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் இயக்கங்களுக்கு நரம்புகளின் செயல்பாடு முக்கியமானதாக உள்ளது

ஒரு எஞ்சினுக்கு எரிபொருள் தேவைப்படுவது போல் நரம்புகள் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலம் அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம்

சாலமன், மத்தி, கொளுத்தி மீன் வகைகளில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த மீன்கள் போதிய அளவில் சாப்பிடுவதன் மூலம் நரம்புகள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கலாம்

டார்க் சாக்லெட்கள் மூளை தொடர்பான நோய் பாதிப்பின் அபாயத்தை தடுக்கிறது.  அதுமட்டுமல்லாம் நரம்பியல் சம்மந்தமான நோய்களான அல்சைமர், பார்கின்சன் போன்ற பாதிப்பின் ஆபத்தையும் குறைக்கிறது 

பாதாம், முந்திரி போன்றவற்றில் மெக்னீசியம் நிறைந்திருக்கிறது. இதில் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. இதில் இருக்கும் புரதம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது

முட்டையில் பி12, பி6 போன்ற பி வைட்டமின்கள், ஃபோலேட் நிறைந்துள்ளன. இவை நரம்பு மண்டல அமைப்புக்கு ஆதரவு அளித்து அவை சீராக செயல்பட உதவுகிறது

முருங்கை இலை நரம்பியக்கடத்தி உற்பத்தி மேம்படுத்தி, நன்மை பயக்கும் மனநிலை, நினைவகம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது

பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்