கூர்மையான பார்வை பெறவும், கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கவும் செய்யும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 14, 2024

Hindustan Times
Tamil

கண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது உடல் நலம் சார்ந்த வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது

சில உணவுகள் உங்கள் டயட்டில் சேர்ப்பதன் மூலம் பார்வைதிறனை மேம்படுத்துவதோடு, உகந்த கண் பார்வையை பெறலாம்

பீட்டா கரோடீன் நிறைந்திருக்கும் கேரட் இரவு நேர பார்வைத்திறனை மேம்படுத்துகிறது. கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ டயட்டில் சேர்த்து கொள்ளலாம்

பீட்டா கரோடீன் அதிகம் நிறைந்த மற்றொரு காய்கறியாக சீனிக்கிழங்கு உள்ளது. இதில் ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. சீனிக்கிழங்கு கண்கள் திசுக்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன், இரவு நேர பார்வையை மேம்படுத்துகிறது. இதை பேக்கிங் செய்தோ, ரோஸ்ட் செய்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்

ஆன்டிஆக்ஸிடன்ட்களான லூடீன், ஜீயாக்சாந்தின் போன்றவை மாகுலா பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. இதை சாலட், ஸ்மூத்தியாக தயார் செய்து பருகலாம்

முட்டையில் கண் லூப்ரிகேஷனுக்கு தேவைப்படும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இந்த அடிப்படை தாதுக்கள் ஆரோக்கமான பார்வையை பெற உதவுகிறது

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்கள் ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிப்பதுடன், கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு பாதிப்பை தடுக்கிறது 

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?