ஒற்றை விதை பழங்களும், அவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளும் தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 11, 2024

Hindustan Times
Tamil

பழங்கள் ஒவ்வொன்று வெவ்வேறு சுவை, வடிவம், வண்ணம் தோற்றத்துடன் காணப்படுகிறது. அதேபோல் சில பழங்களில் அதிக அளவிலான விதைகளும் இருப்பதுண்டு

சில பழ வகைகளில் ஒரேயொரு விதைகள் மட்டும் இடம்பிடிப்பதோடு ஊட்டச்சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தில் ஒரேயொரு விதை மட்டும் இருக்கும். இதில் வைட்டமின்கள், நார்ச்ச்த்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன

ஒற்றை கொட்டையுடன் இருக்கும் லிச்சி பழங்கள் வெள்ளை நிற சதைகளை கொண்டதாக உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பிளக்ஸ், பொட்டாசியம், தாமிரம் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவு அளிப்பதுடன், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இனிப்பும், புளிப்பும் கலந்து சுவையுடைய பிளாக்பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்கிறது. அதேபோல் ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதுடன், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கல்லீரல் மற்றும் கிட்னி செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது

அதிக ஊட்டச்சத்து அடர்த்தி கொண்டிருக்கும் அவகோடாவில் இருக்கும் வைட்டமின்கள் ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது

நடுத்தர சைஸில் இருக்கும் பிளம் பளம் ஒற்றை கொட்டையுடன் சுற்று சதைகள் நிரம்பியதாக இருக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது 

நெய்