மழை நேரத்தில் இயற்கையான முறையில் சளி தொல்லையை விரட்டுவது எப்படி என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 30, 2024

Hindustan Times
Tamil

மழை பரவலாக பெய்து வருவதோடு, குளிரும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் சளி மற்றும் சுவாச தொடர்பான பிரச்னைகள் பலருக்கும் ஏற்படுவதுண்டு

மருந்து, மாத்திரை என எடுத்துக்கொள்ளாமல் இயற்கையான முறையில் சளியை போக்குவது எப்படி என்பதை பார்க்கலாம்

தொண்டை கரகரப்பு, வலி, சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்ப கலந்து தண்ணீர் தொண்டையில் படும் வரும் நனைத்து கொப்பளிக்கும் சால் வாட்டர் கார்கில் முறையை பின்பற்றலாம்

தேன், சிறிது துளசி இலைகள், சிறிய அளவில் மிளகு எடுத்து பொடியாக்கி இந்த கலவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகுவதன் மூலம் சளி, இருமல் விடுபட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இஞ்சி, இலவங்கப்பட்டை, மஞ்சள் கலந்து தண்ணீர் சூடாக்கி தேநீர் போல் பருகுவதன் மூலம் தொண்டை நெரிசல், சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்

சிக்கன் வைத்து சூப் தயார் செய்து வெதுவெதுப்பாக பருகலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், மூக்கு துவாரங்களில் உள்ள சளியை போக்கி செளகரியமான உணர்வை ஏற்படுத்தும்

யூகலிப்டஸ், புதினா போன்றவற்றை அடிப்படை எண்ணெய்யுடன் தண்ணீரில் கலந்து சூடாக்கி ஆவி பிடிப்பதன் மூலம் சளி மற்றும் இருமல் பாதிப்பை தணிக்கலாம் 

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்