வைட்டமின் குறைபாடுகள் நுட்பமான வழிகளில் வெளிப்படும். இதை பெரும்பாலும் நாம் கவனத்தில் கொள்வதில்லை

By Muthu Vinayagam Kosalairaman
Oct 26, 2024

Hindustan Times
Tamil

வைட்டமின் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து அதை தடுப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும், சிக்கல்களை தடுக்கவும் செய்கிறது

வாயின் மூலைகளில் விரிசல், வறட்சி, வலி ஏற்படுவது இரும்புச்சத்து, பி வைட்டமின்கள், குறிப்பாக பி2, ப3, பி6 குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறியாக உள்ளது

போதுமான அளவில் பயோடின் இல்லாமல் இருப்பது, அதாவது வைட்டமின் பி7, இரும்பு, துத்தநாகம் அல்லது வைட்டமின் டி குறைபாடு காரணத்தால் தலைமுடி உதிர்வு, அடர்த்தி குறைந்து மெலிதாக்குதல் பிரச்னை ஏற்படும்

கை, கால்களில் திடீரென உணர்வின்மை வருவது பி வைட்டமின்களான பி12, பி6, போலேட் (பி9) போன்றவற்றின் குறைபாடாக இருக்கலாம். இது நரம்புகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது

வைட்டமின் பி12 அல்லது இரும்பு சத்து குறைபாடு  காரணமாக தோல்கள் வெளுப்படையும். இந்த வைட்டமின்கள் தான் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படலாம்

வாய் பகுதியில் அல்சர், புண்கள் ஏற்படுவது இரும்பு சத்து, போலேட், வைட்டமின் பி12 குறைப்பாட்டின் அறிகுறியாகும். இவை ஆரோக்கியமான சளி சவ்வுகள்

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்