உங்கள் நுரையிரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத மூலிகைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 23, 2024

Hindustan Times
Tamil

ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு நீக்குவதுடன், ஆக்ஸிஜன் அளிக்கும் வேலையை நுரையிரல் செய்கிறது

நுரையிரல் பாதிப்பு சுவாசம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். நுரையிரல் செயல்பாட்டை மேம்படுத்த சில மூலிகைகள் உதவுகின்றன

சளி நீக்கும் குணங்கள், சுவாசப் பாதைகளில் எரிச்சலூட்டும் நச்சுக்கள், தூசுக்களை நீக்குதல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இருமலை தடுக்கும் வல்லமை கொண்டதாக அதிமதுரம் இருக்கிறது. அதிமதுரம் வேர்களை பயன்படுத்தும் முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்

பன்முகதன்மை கொண்ட இஞ்சி சளிகளை நீக்குவதோடு, இதில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள் சுவாச பிரச்னை, சுவாச பாதை நெரிசல், தொண்டை புண் ஆகியவற்றை போக்குகிறது

மஞ்சளில் இடம்பிடித்திருக்கும் குர்குமின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான பண்புகள் நுரையிரல் அழற்சியை தடுக்கிறது

குளிர்ச்சி மற்றும் புத்துணர்வு தரும் பண்புகள் கொண்டிருக்கும் புதினா சைனஸ் அழுத்தம், நெரிசல் போன்றவற்றை தடுத்து, சுவாசிப்பதை எளிதாக்குகிறது

யூகலிப்டஸ் ரத்த கசிவுகளை நீக்கி, சுவாசப்பாதையை சுத்தப்படுத்தி சளியை உயவூட்டுகிறது. இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது

சியா விதை தருகின்ற நன்மைகள்