புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கிய நலனுக்காக தினமும் பருகக்கூடிய பால் கலந்த டீக்கு மாற்றாக இந்த பானங்களை ட்ரை செய்யலாம்
By Muthu Vinayagam Kosalairaman Feb 05, 2025
Hindustan Times Tamil
உடலையும், மனதையும் ரிலாக்ஸ் ஆக்கி கொள்ள டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு இருந்து வருகிறது. பாலில் கலந்து டீ குடிப்பதால் ஆரோக்கியத்தில் தீங்குகள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது
பால் டீக்கு மாற்றாக புத்துணர்ச்சியும், ஆரோக்கிய நன்மையும் தரும் சில பானங்கள் உள்ளன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்
இஞ்சி டீ பருகுவது வயிற்று வலியை ஆற்றுப்படுத்தி, குமட்டலை தணிக்கிறது. மிதமான சூட்டில் இந்த டீயை பருகலாம்
சுவையுடன், குறைவான கலோரி கொண்டதாக ப்ரூட் டீ இருந்து வருகிறது. பல்வேறு சூப்பர் மார்கெட்களில் கிடைக்கிறது. லிக்கோரைஸ் எனப்படும் மதுபானங்கள் கலந்திருக்கும் டீ பருவதை தவிர்ப்பது நல்லது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்
இனிப்பான்கள் சேர்க்கப்படாத புதினா டீ பருகலாம். இது குறைவான கலோரியுடன் இருப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தி புத்துணர்ச்சியும் அளிக்கிறது
இதயத்துக்கு நன்மை தரும் பானமாக ஹாட் சாக்லேட் உள்ளது. இனிப்பான்கள் இல்லாத கொக்கோ பவுடர் மற்றும் குறைவான கெழுப்பு பாலுடன் சிறிய அளவில் கலந்து பருகலாம்
க்ரீன் டீ பவுடராக இருந்து வரும் மட்சா லேட்டே சிறந்து புத்துணர்வு பானமாக உள்ளது. குறைவான கொழுப்பு பாலுடன், குறைவான கலோரி இனிப்பான்கள் சேர்த்து பருகலாம்