குளிர் காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 25, 2024
Hindustan Times Tamil
கரும்பில் இருந்து வெல்லம் தயாராகிறது. இதில் ஏராளமான வைட்டமின்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன
வெல்லத்தில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், வைட்டமின் சி, தையாமின், ரபோபிளேவின், நியாசின் உள்பட பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன
வெல்லம் சாப்பிடுவது சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. இது சர்க்கரை சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதுடன் எடையிழப்புக்கும் உதவுகிறது
மைக்ரோ ஊட்டச்சத்துகள், வைட்டமின் சி, துத்தநாகம், செலினியம் வெல்லத்தில் நிறைந்து காணப்படுகிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
தொண்டையில் எரிச்சல் ஏற்படுவதை வெல்லம் தணிக்கிறது. செரிமான தொற்று பாதையை சுத்தமாக்குகிறது. சளி மற்றும் இருமல் பாதிப்பை குறைத்து சுவாசம் தொடர்பான பிரச்னைகளை தீர்வு அளிக்கிறது
அதிகப்படியான கால்சியம், மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகளான பீனால், பிளேவனாய்ட்கள் மூட்டு வலி மற்றும் விறைப்பு தன்மையை குறைக்கிறது
வெல்லத்தில் இருக்கும் மெக்னீசியம், இரும்பு பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் வலியை குறைக்கிறது. சோர்வு ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்கிறது
புரதக் குறைபாட்டை அடையாளம் காணக்கூடிய 7 அறிகுறிகள் இங்கே