வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 26, 2024
Hindustan Times Tamil
நீங்கள் சாப்பிடும் முதல் உணவு செரிமானத்தில் முக்கிய தாக்கத்தையும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டால் வயிறு உப்புசம், அசெளகரியம், செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் பழங்களில் அதிகப்படியான அசிடிக் அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இதில் வயிற்றுப் புறணியில் எரிச்சலை ஏற்படுத்தும். அத்துடன் அமில வீச்சு அல்லது இரைப்பை அழற்சிக்கு வழி வகுக்கலாம்
வெறும் வயிற்றில் காரணமான உணவுகளை சாப்பிடகூடாது. இது இரைப்பையில் அசெளகரியத்தை ஏற்படுத்தி வயிற்று வலி, எரிச்சல், அமில வீச்சை உண்டாக்கும்
அதிகப்படியான சர்க்கரை நிறைந்த பாஸ்தரிக்கள், பழ ஜூஸ்கள், சர்க்கரை தானியங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் திடீரென ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படும்
பச்சை காய்கறிகளான கேரட், ப்ரோக்கோலி, முட்டை கோஸ் போன்றவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து, செல்லுலோஸ் வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிற்றி அசெளகரியம் ஏற்படலாம்
கார்ப்போனேட்டட் பானங்களை வெறும் வயிற்றில் எடுத்துகொண்டால் செரிமான அசெளகரியம், தசைப்பிடிப்பு மற்றும் அமைதியின்மை ஏற்படும்
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?