திடீர் மனநிலை மாற்றம், மனஅழுத்தம்
ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த உணவுகளை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட்டால் அதிலிருந்து விடுபடலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 17, 2024
Hindustan Times Tamil
நாம் சாப்பிடும் உணவுகளும் மனநல ஆரோக்கியத்தோடு தொடர்புடையதாக உள்ளது. சில ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் ஆற்றலையும், உணர்வு ரீதியான நெகிழ்வுதன்மையையும் மேம்படுத்துகிறது
Stressஆக உணர்பவர்கள் சாப்பிட வே|ண்டிய ஸ்நாக்ஸ் வகைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படும் டார்க் சாக்லெட்டுகள் காரிஸ்டால் அளவை குறைக்க உதவுகிறது. ஒரு சிறிய துண்டு டார்க் சாக்லெட் தேவையில்லாமல் பிற உணவுகள் கொரிப்பதை தடுப்பதுடன், ரிலாக்ஸ் உணர்வை தருகிறது
பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகளில் ஆரோக்கிய கொழுப்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இந்த ஊட்டசத்துகள் கவலையை
குறைக்க உதவுவதுடன், ஒட்டு மொத்த மனநிலை மாற்றத்தை மேம்படுத்துகிறது
கிரேக்க யோகர்டில் புரதம், ப்ரோபயோடிக்குகள் நிறைந்துள்ளன. இது குடல் ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிப்பதுடன், மனநிலையை நிலையாக வைக்க உதவுகிறது
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் அதிக அளவிலான வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுவதுடன், புத்துணர்வு தரும் ஊட்டச்சத்து ஸ்நாக்ஸ் ஆக இருக்கிறது
அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்திருக்கும் ஓட்மீல் ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. மனஅழுத்தம் ஏற்படும்போது மனநிலையை நிலையாக வைக்க உதவுகிறது
நவம்பர் 24-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்