பலருக்கும் பெரும் தொல்லையாக இருந்து வரும் டபுள் சின் என்கிற இரட்டை தாடையை எளிய முறையில் போக்குவது எப்படி என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 02, 2024

Hindustan Times
Tamil

இரட்டைக் கன்னம் அல்லது இரட்டை தாடை என்று அழைக்கப்படும் டபுளி சின் வராமல் இருப்பதற்கு பலரும் சுயநினைவுடன் இருப்பது பொதுவான விஷயமாக உள்ளது 

டபுள் சின் குறைக்கவும், தாடை வடிவத்தை சீராக வைக்கவும் சில காஸ்மெடிரிக் நடைமுறைகள் இருக்கின்றன. இருப்பினும் இயற்கையான முறையில் இதை போக்குவது எப்படி என்பதை பார்க்கலாம்

கழுத்தை நீடித்தல் பயிற்சியை செய்வது. உங்கள் தலையை மேல்நோக்கி சாய்த்து, உங்கள் உதடுகளை குவித்து 10 விநாடிகள் வைத்திருங்கள். தினமும் 10 முதல் 15 முறை செய்வதன் மூலம் இரட்டை தாடை விரைவில் சீராகும்

உங்கள் உதடுகளில் ஓ வடிவத்தை உருவாக்கி, உங்கள் தலையை பின்னால் சாய்க்கவும். இப்படியே சில வினாடிகள் வைத்திருங்கள். 10 முதல் 15 முறை இதை செய்தால் சிறந்த முடிவை பெறலாம்

தலையை பின்னால் வைத்து, மேல் பகுதியை பார்த்தவாறு வாயின் மேற்பகுதியில் நாக்கின நுனியை வைத்து  அழுத்தவும். 10 விநாடிகள் அப்படி விட்டு, ரிலாக்ஸ் ஆகி பின்னர் மீண்டும் என இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்யவும்

சிறிய பந்து ஒன்ற தாடைக்கு அடியில் வைத்து லேசாக அழுத்தி, 10 விநாடிகள் வரை பொறுத்திருக்கவும். இதனை 10 முதல் 15 தடவை செய்வதன் மூலம் முகம் மற்றும் கழுத்து தசைகளுக்கு இயக்கங்கள் ஏற்பட்டு எதிர்பார்த்த பலனை பெறலாம்

இந்த பயிற்சிகளை காட்டிலும்  மிகவும் எளிமையானதும், நல்ல பலன் தரக்கூடியதாவும் இருப்பது சிவிங்கம் மெல்வது. இது முகம், கன்னங்களின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. அத்துடன் தாடை தசைகளை வலுப்படுத்துகிறது 

பொடுகு தலையில் மட்டுமல்ல, கண் இமைகளிலும் உள்ளது, இது ஆபத்தானது