எலுமிச்சை மற்றும் தேன் கலந்த நீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 22, 2024

Hindustan Times
Tamil

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை, ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து குடிப்பதால் சில நன்மைகளை பெறலாம்

வைட்டமின் சி நிறைந்திருக்கும் எலுமிச்சை, நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டதாக தேன் உள்ளது. சரும ஆரோக்கியம், செரிமான நன்மை, சிறுநீரக கற்கள் கரைப்பு போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் எலுமிச்சை நீர் பருகுவதால் கிடைக்கிறது

எலுமிச்சை தேன் நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.  உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது

சருமத்தில் சுருக்கங்கள், முகத்தில் கருப்புள்ளிகளை போக்க எலுமிச்சை உதவுகிறது. அதேபோல் தேன் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, மிருதுவாக்குகிறது

உடலில் கொழுப்புகளை செரிமானம் செய்வதற்கும், ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கும் எலுமிச்சை உதவுகிறது. தேன் ப்ரீ பயோடிக்குகளாக செயல்பட்டு சீரான செரிமானத்துக்கு உதவுகிறது

வைட்டமின் சி நிறைந்திருக்கும் எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கிறது. தேனில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கல் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடுகிறது

வளர்சிதை மாற்றத்தை எலுமிச்சை தேன் நீர் மேம்படுத்தி கலோரிகள் விரைவாக எரிக்க உதவுகிறது. இதன் மூலம் எடையிழப்பு சாத்தியமாகிறது

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்