நார்ச்சத்து மிக்க உணவுகளை உங்கள் டயட்டில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 03, 2024
Hindustan Times Tamil
உங்கள் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை பேனி காப்பதில் நார்ச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
செரிமான ஆரோக்கியம், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உடல் எடை நிர்வாகம் என பல நன்மைகளை நார்ச்சத்துகளை தருகின்றன
குடல் இயக்கத்தை ஏற்படுத்தி மலச்சிக்கலை போக்குவதில் நார்ச்சத்து உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே செரிமான ஆரோக்கியத்துக்கு உகந்ததாக உள்ளது
நார்ச்சத்துகளில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் இருக்ுகம் கொல்ஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதன் விளைவாக இதய நோய் பாதிப்பின் ஆபத்து குறைகிறது
நார்ச்சத்து உணவுகள் செரிமானத்தை மெதுவாக்குவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
நார்ச்சத்து உணவுகள் குறைவான கலோரிகள் கொண்டவையாக இருப்பதுடன், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடையை நிர்வகிக்க உதவுகிறது
அதிப்படியான நார்ச்சத்துகள் கொண்டிருக்கும் முழு தானியங்கள் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இதர செரிமான பாதை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது