By Kathiravan V
Jan 03, 2025

Hindustan Times
Tamil

இந்தியாவில் புதிய தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வரும் 2025ஆம் ஆண்டில் வளர்ச்சி வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ள துறைகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்!

கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அதில் பாட் காஸ்ட் சார்ந்த கண்டெண்டுகளை உருவாக்குபவர்களான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விரிவான பாட்காஸ்ட்களை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கு அதிக வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. 

ட்ரோன்களின் பயன்பாடு விவசாயம், சினிமா, மீடியா, லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. எனவே ட்ரோன்களை பழுது நீக்கும் நிறுவனங்கள் மிக குறைவாகவே உள்ளது. இதற்கான திறன்களை வளர்த்துக் கொண்டு வணிக நிறுவனம் தொடங்கும் போது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது, குறிப்பாக லிக்ட் இன் போன்ற தளங்களில் வணிக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் செய்து தருவதன் மூலம் பெரிய அளவில் வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன. 

உலகம்  முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் துறையாக செயற்கை நுண்ணறிவு துறை உள்ளது. நாளுக்கு நாள் ஏராளமான ஏ.ஐ மென்பொருட்கள் சந்தைக்கு வருகிறது. இந்த ஏ.ஐ. மென்பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி மையம் தொடங்கினால் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளது. 

இந்தியாவில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் சார்ஜிங் நிலையங்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. மின்சார வாகன உரிமையாளர்களுக்கு வசதியான மற்றும் அணுகக்கூடிய சார்ஜிங் வசதிகளை வழங்குவதன் இந்தத் துறையில் அதிக வளர்ச்சி சாத்தியம் உள்ளது.

உலக அளவில் வேகமாக வளரும் துறையாக ஆகுமண்டெட் ரியாலிட்டி மற்றும் விரிட்சுவல் ரியலிட்டி ஆகிய துறைகள் உள்ளது. வரைபடக் கலை மூலம் ஒரு பொருளை எப்படி இருக்கும் என்பதை நேரடியாகவே உணரக் கூடிய அனுபவத்தை இந்த வணிகம் தருகிறது. கட்டுமானத்துறை, திறன் பயிற்சி துறை, ரியல் எஸ்டேட், ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்ட துறைகளில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

Vastu Tips:  வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?

Pic Credit: Shutterstock