பனி காலத்தில் வெந்தய கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 27, 2024

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்துகள் நிறைந்த பச்சை இலை காய்கறியாக இருந்து வரும் வெந்தய கீரை பனி நேரத்தில் சாப்பிடக்கூடிய கீரை வகைகளில் ஒன்றாக உள்ளது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி ஆகியவை நிரம்பியிருக்கும் வெந்தய கீரை நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இதன் விளைவாக பனி நேரத்தில் பொதுவாக ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு வருவதை தடுக்கும்

இரும்பு சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருந்து வரும் வெந்தய கீரை, இரத்த சோகையை போக்குகிறது. சிவப்பு ரத்த அனுக்கள் உற்பத்தியை மேம்படுத்துகிறது. பனி காலத்தில் சோர்வு ஏற்படாமல் பார்த்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது

வெந்தய கீரையில் இருக்கும் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஜன் உற்பத்தியை மேம்படுத்து சரும் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. குளிர் காரணமாக வறட்சி, எரிச்சல் ஏற்படுவதை தடுக்கிறது

நார்ச்சத்துக்கான இயற்கையான ஆதாரமாக இருந்து வரும் வெந்தய கீரை செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது

வெந்தய கீரையில் இடம்பிடித்திருக்கும் சேர்மானங்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. எனவே டயபிடிஸ் நோயாளிகளுக்கான சிறந்த உணவாக உள்ளது

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தந்து அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தி எடையிழப்புக்கு உதவுகிறது

வெந்தய கீரையில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து கொல்ஸ்டரால் அளவை குறைக்கிறது. இதன் விளைவாக இதய நோய் அபாயம் தடுக்கப்படுகிறது

பனி காலத்தில் சுவாச பிரச்னைகள் பலருக்கும் ஏற்படுவதுண்டு. சளிகளை நீக்கும் தன்மை வெந்தயத்தில் இருப்பதால் சுவாச பாதை அமைப்பை சுத்தப்படுத்தி இருமல், சளி போன்ற தொல்லைகள் ஏற்படுவதை தடுக்கிறது

அழற்சிக்கு எதிரான பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது, இதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியம் வலுபெறுகிறது

வெந்தய கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை நீக்கி அதன் சீரான செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது

பாதங்களை நெய் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள் இதோ!