தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  World First All-electric Plane Completes Maiden Flight; Alice Officially Electrifies The Skies

World first electric plane: வந்தாச்சு உலகின் முதல் எலெக்ட்ரிக் விமானம் ‘ஆலிஸ்’

Sep 30, 2022 11:37 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 30, 2022 11:37 PM IST

'ஆலிஸ்' என்ற பெயரில் முழுவதும் மின்மயமான எலெக்ட்ரிக் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக செய்துள்ளது. பூஜ்ஜியம் உமிழ்வு கொண்ட இந்த ஆலிஸ் விமானம், இலகு ரக ஜெட்கள், டர்போபிராப் விமானங்களுடன் ஒப்பிடும்போது ஒரு மணி நேர பயணத்துக்கு மிகவும் குறைவான விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் விமானங்களில் பயணிக்கலாம். ஆலிஸ் விமானத்தை உருவாக்கி ஏவியேஷன் நிறுவனம், தங்களது விமானம் வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்த அந்த தருணத்தை வரலாற்று சிறப்பு மிக்கது என கொண்டாடியுள்ளனர். இந்த ஆலிஸ் விமானம் வாஷிங்டன் கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கிய அனைத்து எலெக்ட்ரிக் விமானங்களும் 8 நிமிடங்கள், 3,500 அடி உயரம் வரை பறந்தன. அனைத்தும் எலெட்ரிக் உதவியுடன் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானமாக ஆலிஸ் உள்ளது. ஆர்லிங்டனை சேர்ந்த நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. 150 முதல் 250 மைல்கள் வரை இயங்கும் இந்த விமானங்கள் மூன்று வகையான வேரியண்ட்களில் அமைந்துள்ளது. 9 பயணிகள் செல்லும் விதமாகவும், ஆறு பயணிகள் எக்ஸ்யூக்யூடிவ் கேபினில் அமர்ந்து செல்லும் விதமாக, இ-கார்கோ விமானமாவும் உள்ளது. இதன் அதிகபட்ச வேகமாக 260 நாட்டிகல் வேகமும், அதிகபட்ச எடையாக 2, 500LBS பயணிகள் விமானத்துக்கும், 2, 500LBS கார்கோ விமானங்களுக்கும் எடை தாங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு magni650 எலெக்ட்ரிக் ப்ரோபல்ஷன் யுனிட்களை கொண்டுள்ள ஒரே விமானமாக இது அமைந்துள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் விமான சேவை வழங்கும் இரண்டு விமான நிறுவனங்கள் முறையே 75 மற்றும் 50 விமானங்கள் ஆலிஸ் விமானத்தை ஆர்டர் செய்துள்ளன. DHL எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆலிஸ் விமானத்தின் 12 இ-கார்கோ விமானங்களை புக் செய்துள்ளது.

More