Tamil News  /  Video Gallery  /  Viral: Wife Thrashes Husband After Finding Him With Another Woman In Agra Hotel

viral: கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவர்! மன்னிப்பு கேட்டும் வெளுத்து வாங்கிய மனைவி

23 September 2022, 17:01 IST Muthu Vinayagam Kosalairaman
23 September 2022, 17:01 IST

கள்ளக்காதலியுடன் கையும் களவுமாக பிடித்த கணவன் மற்றும் அவருடன் இருந்த பெண்ணை கொஞ்சமும் இரக்கமின்றி அந்த நபரின் மனைவி தாக்கும் விடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனியார் ஹோட்டல் அறையில் வைத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வசமாக மாட்டிக்கொண்டதால் இருவரும் மன்னிப்பு கேட்டனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் தனது கணவர் மற்றும் அந்த பெண்மணியை வெளுத்து வாங்கியுள்ளார். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட மனைவியிடம் மாட்டிக்கொண்ட அந்த நபர் ஆம்ஆத்மி கட்சியின் மாவட்ட தலைவர் என கூறப்படுகிறது. இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்மணியின் துணிச்சலுக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர். முன்னதாக, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதை பற்றி தெரிந்துகொண்ட அந்த பெண் நேரடியாக அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று இருவரையும் பிடித்துள்ளார். பின்னர் தனது காலில் இருந்த செருப்பை கழிட்டி இருவரையும் கடுமையாக தாக்கினார். மன்னிப்பு கேட்டாலும் கண்டுகொள்ளாமல் கணவர், அவருடன் இருந்த பெண் என மாறி மாறி தாக்கினார்.

More