Tamil News  /  Video Gallery  /  Viral: Bihar Mobile Thief Hangs From Window Of Moving Train As Passengers Catch Him Red-handed

Viral Video: திருடனுக்கு ஓடும் ரயிலில் பயணிகள் கொடுத்த கொடூர தண்டனை

16 September 2022, 15:16 IST Karthikeyan S
16 September 2022, 15:16 IST

பிகார், பெகுசரா ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் செல்போனை பறிக்க பங்கஜ் என்ற திருடன் திட்டம் தீட்டியுள்ளான். ரயில் மெல்ல கிளம்பும் நேரம் பார்த்து பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பங்கஜ் ஜன்னல் வழியாக ரயிலுக்குள் இருந்த பயணியின் செல்போனை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது, அந்த பயணி அந்த ஜன்னல் வழியாக வந்த திருடனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அதற்குள் ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடன் தன்னை விட்டால் போதும் என நினைத்துள்ளார். ஆனால், திருடனுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மற்ற பயணிகளும் சேர்த்து அவரின் கையை கெட்டியாக பிடித்துக்கொள்ள ரயிலும் ரயில் நிலையத்தை தாண்டிவிட்டது. ஓடும் ரயிலில் சுமாார் 10 கி.மீ தூரம் வரை திருடனை ஜன்னலில் தொங்கவிட்டு, அடுத்த ஸ்டேசனில் போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஜன்னல் கம்பியில் அந்த திருடன் தொங்கிய படி கெஞ்சி கதறும் வீடியோவை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More