தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vedasandur: சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு..போர்க்கொடி தூக்கிய பொதுமக்கள்!

Vedasandur: சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு..போர்க்கொடி தூக்கிய பொதுமக்கள்!

May 23, 2024 06:49 PM IST Karthikeyan S
May 23, 2024 06:49 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ளது நாகன்களத்தூர். இப்பகுதிதியில் காலம் காலமாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பிய வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், அந்த பகுதியில் நிலத்தை வாங்கிய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த தனியார் சோலார் நிறுவனம் அங்கு சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தனியார் சோலார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மின்சார ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிதுநேரம் பரபரபப்பு ஏற்பட்டது.
More