சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து நீதிமன்றத்துக்கு அனுமதி - எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து நீதிமன்றத்துக்கு அனுமதி - எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை

சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து நீதிமன்றத்துக்கு அனுமதி - எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை

Published Dec 19, 2024 07:42 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Dec 19, 2024 07:42 PM IST

  • திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி பிரிவில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் எம்எல்ஏ காந்தி ராஜன் பேசியபோது, தமிழகத்திலேயே இந்த ஆண்டு குஜிலியம்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு புதிய நீதிமன்றங்களுக்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான் உயர் நீதிமன்ற பதிவாளரை 2 முறை பார்த்து குஜிலியம்பாறைக்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, தமிழகத்தில் 78 ஊர்களுக்கு நீதிமன்றம் தேவைப்படுகிறது, அதில் குஜிலியம்பாறை போன்ற சின்ன ஊருக்கு தர முடியாது என்று கூறினார். அதன் பின்னர் அமைச்சர் ரகுபதியிடம் திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து, நடையாய் நடந்து, பட்டு வேஷ்டியை போட்டு எங்களால் முடிந்த காரியங்களை எல்லாம் செய்துதான் நீதிமன்றத்திற்கு அனுமதி வாங்கினோம் என்று பேசினார். காந்திராஜன் பேசிய முழு விடியோ இதோ

More