Valentine's Day: பேக்கரியில் காதலர் தின ஆஃபர்.. கையில் தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணியினர்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Valentine's Day: பேக்கரியில் காதலர் தின ஆஃபர்.. கையில் தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணியினர்!

Valentine's Day: பேக்கரியில் காதலர் தின ஆஃபர்.. கையில் தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணியினர்!

Published Feb 14, 2025 02:23 PM IST Karthikeyan S
Published Feb 14, 2025 02:23 PM IST

  • Valentine's Day: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி (பெஸ்ட் மம்மி) ஒன்றில் காதலர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து வரவேற்று ஆஃபர் அளிக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். இதற்கு எதரிப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் தாலிக் கயிறுடன் காதலர் தின ஆஃபர் அறிவித்த தனியார் பேக்கரி நிறுவனத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைத்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் பேக்கரி நிறுவனம் ஆஃபர்களை கேன்சல் செய்து விட்டதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். உடனடியாக ஆஃபர் விளம்பர பலகையையும் நிறுவனத்தினர் அகற்றினர். தனியார் பேக்கரி நிறுனம் முன்பு தாலி கயிறுடன் இந்து முன்னணியினர் வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More