Tamil News  /  Video Gallery  /  U.s. City Fooled By Nithyananda Kailasa; Newark Scraps Agreement With Fictional Country

Kailasa: அமெரிக்க நகரின் டூப்பாக மாறிய கைலாசா…ஒப்பந்தத்ததை ரத்து செய்து ஷாக்

07 March 2023, 18:20 IST Muthu Vinayagam Kosalairaman
07 March 2023, 18:20 IST
  • அமெரிக்காவில் உள்ள பிரபல நகரம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்ற சுவாமி நித்தியானந்தா வசிப்பதாக கூறி வரும் கைலாசா நாடு என்று டூப் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் சுவாமியாக திகழும் நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்ட கற்பனை நகரமாக நியூ ஜெர்சி மாகணத்தில் உள்ள நெவார்க் நகரம் இருந்துள்ளது. இதற்கான ஒப்பந்த விவகாரம் தவறுதலாக நடந்திருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. அத்துடன் கைலாசாவுடனான சகோதரத்துவ நாட்டுக்கான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது தொடர்பாக நித்தியானந்தா தனது டுவிட்டரில் அறிவித்தார். ஜெனிவா நாட்டில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று, பெண்களுக்கு பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது பற்றி புள்ளிவிவரங்களை குறிப்பிட்டனர். பின்னர் இதுதொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் வைரலான நிலையில் ஐநா சபை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், கைலாசா நாட்டினரால் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களங்களை ஐநா அமைப்பு நிராகரித்துள்ளது. தன்னை கடவுளாகவு பிரகடனப்படுத்திக்கொண்டவரும், பாலியல் வழக்கில் இந்தியாவிலிருந்து தப்பி தேடப்படும் நபராக இருந்து வரும் நித்தியானந்தா 2019ஆம் ஆண்டில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வசிப்பதாக அறிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் கூறப்படும் கைலாசா நாட்டை 2 பில்லியன் நபர்கள் பின்தொடர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
More