தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  U.s Air Force Launches Minuteman-iii Ballistic Missile After Delays

Video: கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனை வெற்றி - அமெரிக்கா

Aug 17, 2022 11:45 AM IST Karthikeyan S
Aug 17, 2022 11:45 AM IST

நீண்ட தூரம் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் திறண் கொண்ட மினிட்மேன்-3 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. கலிபோர்னியாவின் வான்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாகவும், பசிபிக் தீவு முழுவதும் சுமார் 6,760 கிலோ மீட்டர் இந்த ஏவுகணை பயணித்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மினிட்மேன்-3 ஏவுகணை 9,660 கிலோ மீட்டர் தொலைவிலான இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் உடையது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டைச் சுற்றி ஏவுகணை சோதனை மற்றும் ராணுவப் பயிற்சிகளை சீனா மேற்கொண்ட நிலையில், பதற்றத்தைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்க இருமுறை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More