Uttar Pradesh: உ.பி: நர்ஸை கவனிக்க சொல்லி ரீல்ஸ் விடியோ பார்த்த டாக்டர்! நெஞ்சு வலியால் துடித்த பெண் உயிரிழப்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Uttar Pradesh: உ.பி: நர்ஸை கவனிக்க சொல்லி ரீல்ஸ் விடியோ பார்த்த டாக்டர்! நெஞ்சு வலியால் துடித்த பெண் உயிரிழப்பு

Uttar Pradesh: உ.பி: நர்ஸை கவனிக்க சொல்லி ரீல்ஸ் விடியோ பார்த்த டாக்டர்! நெஞ்சு வலியால் துடித்த பெண் உயிரிழப்பு

Jan 29, 2025 07:42 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 29, 2025 07:42 PM IST

  • உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காமல் நர்ஸ்களை கவனிக்க சொல்லி மொபைலில் ரீலிஸ் விடியோ பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நோயாளி பெண் நெஞ்சுவலியால் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டடுள்ளது. இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கும், மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவர் இறந்து போன பெண்ணின் மகனை தாக்கியுள்ளராம். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

More