மதுரை - தூத்துக்குடி சாலையில் சுங்க வரி வசூலிக்க இடைக்கால தடை! தொடரும் வசூல் வேட்டையால் சர்ச்சை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மதுரை - தூத்துக்குடி சாலையில் சுங்க வரி வசூலிக்க இடைக்கால தடை! தொடரும் வசூல் வேட்டையால் சர்ச்சை

மதுரை - தூத்துக்குடி சாலையில் சுங்க வரி வசூலிக்க இடைக்கால தடை! தொடரும் வசூல் வேட்டையால் சர்ச்சை

Published Jun 05, 2025 02:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 05, 2025 02:45 PM IST

மதுரை - தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள், நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் வாகன ஒட்டிகளிடம் 30 சதவீத சுங்க கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பாட்ட பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னரும் இந்த சாலையில் சுங்க வரி வசூல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

More