"தூய்மை மிஷன் திட்டம்.." தூய்மையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  "தூய்மை மிஷன் திட்டம்.." தூய்மையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

"தூய்மை மிஷன் திட்டம்.." தூய்மையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published Jun 06, 2025 11:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 06, 2025 11:00 PM IST

  • தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில், அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணி குறித்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். தூய்மை மிஷன் என்ற திட்டத்தினை முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக மானியக் கோரிக்கையில் அறிவித்தோம். இதற்காக முதலமைச்சர் ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்தார். 38 மாவட்டங்களிலும் நடக்கக்கூடிய அனைத்து பணிகளையும் கண்காணிப்பதற்கும், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் பேசுவதற்கும் மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் வார் ரூம் உருவாக்கியிருக்கிறோம். இரண்டு நாட்களில் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்த பின்னர் அடுத்தகட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். உதயநிதி பேசிய முழு வீடியோ இதோ.

More