தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tn Congress Leader Selvaperunthagai Press Meet

Selvaperunthagai: "மூழ்கும் கப்பலில் ஏறியிருக்கிறது பாமக" - செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்!

Mar 19, 2024 04:04 PM IST Karthikeyan S
Mar 19, 2024 04:04 PM IST
  • சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர பட்டியலிடப்பட்ட எண்ணுடன் தேர்தல் ஆணையத்திற்கு அளித்து பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்திருப்பது, இன்னும் ஜனநாயகம் மாண்டு போகவில்லை. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பிரதமர் மோடி சர்வதிகார ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி் நடத்திக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க ஆட்சியின் முகத்திரை கிழிந்துக்கொண்டுக் இருக்கிறது. மூழ்கும் (பா.ஜ.க) கப்பலில் பா.ம.க ஏறியுள்ளது. அதுவும் சேர்ந்து மூழ்கும். தேர்தல் பத்திரம் பற்றி பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும். விஞ்ஞான ரீதியாக பா‌.ஜ.க., ஊழல் செய்கிறது. இரண்டு, மூன்று நாட்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும். தமிழகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் சூழல் ஏற்படலாம்." என்று தெரிவித்தார்.
More