தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tn Bjp Leader Annamalai Press Meet In Coiambatore Regarding Pm Modi Road Show

Annamalai: தமிழிசை ராஜிநாமாவா?-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது என்ன?

Mar 18, 2024 03:48 PM IST Manigandan K T
Mar 18, 2024 03:48 PM IST
  • ஆளுநர், துணைநிலை ஆளுநர் பதவியை தமிழிசை செளந்தரராஜன் ராஜிநாமா செய்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து என்ன என தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள். கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்து இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து பா.ஜ.க சார்பில் கருத்து சொல்ல விரும்ப வில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்வு நடக்கும் சாலையினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆய்வினை நிறைவு செய்த பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பொது மக்கள் 4 மணிக்கே ரோடு ஷோ நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
More