தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  காட்டெருமையை துரத்தும் புலி.. வைரல் வீடியோ

காட்டெருமையை துரத்தும் புலி.. வைரல் வீடியோ

Apr 12, 2024 02:38 PM IST Pandeeswari Gurusamy
Apr 12, 2024 02:38 PM IST

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் ரோட்டில் இருந்து கன்னிமாரா தேக்கு செல்லும் வழியில் புலி ஒன்று காட்டெருமையை துரத்தும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் டாப் ஸ்லிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் தென்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து பல்வேறு வீடியோ பதிவுகளை எடுத்து வருகின்றனர். எனினும் ஆபத்தான வனவிலங்குகள் காட்டு வழிப் பாதையில் அடிக்கடி தென்படுவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும், வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

More