தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Crime: கம்பம் மெட்டு பகுதியில் கேரள மாநில காருக்குள் இருந்த மூன்று பேரின் உடல் - போலீசார் விசாரணை

Crime: கம்பம் மெட்டு பகுதியில் கேரள மாநில காருக்குள் இருந்த மூன்று பேரின் உடல் - போலீசார் விசாரணை

May 16, 2024 05:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 16, 2024 05:56 PM IST
  • தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் இரு மாநில எல்லை சாலையான கம்பம் மெட்டு பகுதியில், கன்னிமார் ஓடை என்ற பகுதியில் மே 16ஆம் தேதி காலை முதல் கேரள எண் பதிவு கொண்ட ஒரு கார் நீண்ட நேரமாக புளிய மரத்தடியில் நின்று கொண்டிருந்தது. அந்த வழியே வேலைக்கு சென்ற சிலர் காருக்கு அருகே சென்று பார்த்த போது காருக்குள் மூன்று பேர் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் ஒரு பெண் உட்பட மூன்று பேர் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரை திறந்து சோதனை செய்தபோது மூன்று பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இறந்தவர்களின் உடலை கைப்பற்றி போலீசார் சோதனை செய்ததில், மூன்று பேரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்தவர்களில் கணவன் ஜார்ஜ் ஜக்காரியா(50), மனைவி மெர்சி (45), மகன் அகில் (35) என்பதும் தெரியவந்தது. இவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலையா? என்று சந்தேக மரணமாக போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More