Tamil News  /  Video Gallery  /  This Indian Scientist Is Working With The World Most Powerful Telescope

James Webb Space Telescope: உலகின் பெரிய டெலஸ்கோப் பயன்படுத்தும் இந்திய விஞ்ஞானி

04 November 2022, 23:20 IST Muthu Vinayagam Kosalairaman
04 November 2022, 23:20 IST

பிரபல ஆஸ்ட்ரோ இயற்பியல் விஞ்ஞானியான மனோஜ் பூர்வன்காரா மற்றும் அவரது குழுவினர், விண்ணில் உள்ள நட்சத்திரங்கள் தொடர்பான ஆய்வுக்காக 66 மணி நேரம் உலகின் சக்தி வாய்ந்த டெல்ஸ்கோப்பாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்த டெல்கோப்பை பயன்படுத்தும் முதல் இந்தியர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறுகிறார்கள். இந்த டெலஸ்கோப் மூலம் பிரபஞ்சத்தின் தொலைதூர பகுதிகள் முதல், சில நட்சத்திரங்களின் ஆரம்ப கால வளர்ச்சியையும் பார்க்கலாம். மனித இனம் நீண்ட நாள்களாக விடை தேடிக்கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் மூல கோட்பாட்டை இந்த டெலாஸ்கோப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது. பூமியிலிருந்து சுமார் 1 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும் விஷயங்களையும் மிக துல்லியமாக காட்டும் வல்லமை கொண்ட இந்த டெலஸ்கோப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. மனித கண்களால் காணமுடியாத விஷயங்களையும் இந்த ஜேமஸ் வெப் ஸ்போஸ் மூலம் காணலாம். இந்த பிரபஞ்சம் முழுவதும் லட்சக்கணக்கில் நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் வெகு சிலவற்றை பற்றி மட்டுமே மனித இனம் கண்டறிந்துள்ளது. விண்ணில் உள்ள நட்சத்திரங்கள் ஏரளாமான மர்மங்களை தன் உள்ளே ஒளித்து வைத்துள்ளன. அந்த வகையில் விஞ்ஞானி மனோஜ் பூர்வன்காரா மேற்கொள்ளும் ஆராய்ச்சியின் மூலம் சில அடிப்படை கேள்விகளுக்கான விடைகளை கண்டறியவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More