தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tn Bus: திடீரென கழன்றோடிய அரசு பேருந்தின் சக்கரம்.. பழனி அருகே பரபரப்பு!

TN Bus: திடீரென கழன்றோடிய அரசு பேருந்தின் சக்கரம்.. பழனி அருகே பரபரப்பு!

Jun 03, 2024 03:19 PM IST Karthikeyan S
Jun 03, 2024 03:19 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 3) காலை வேப்பன் வலசிற்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தில் குழந்தைகள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வேப்பன் வலசு அருகே பேருந்தின் இடதுபுற முன் சக்கரம் கழன்று சாக்கடையில் ஓடியது. இதனால் பேருந்தின் நிலை தடுமாறியதும் பயணிகள் கூச்சலிட்டு அலறினர். ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர். அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
More