EPS vs MK Stalin: 'நான் பேசுவதை நேரலை செய்ய தெம்பு, திராணி உள்ளதா?' - ஈபிஎஸ் கடும் தாக்கு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Eps Vs Mk Stalin: 'நான் பேசுவதை நேரலை செய்ய தெம்பு, திராணி உள்ளதா?' - ஈபிஎஸ் கடும் தாக்கு!

EPS vs MK Stalin: 'நான் பேசுவதை நேரலை செய்ய தெம்பு, திராணி உள்ளதா?' - ஈபிஎஸ் கடும் தாக்கு!

Published Apr 08, 2025 03:57 PM IST Karthikeyan S
Published Apr 08, 2025 03:57 PM IST

  • சட்டப்பேரவையில் எதிர்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாங்கள் மக்கள் பிரச்னையைத்தான் சட்டமன்றத்தில் பேசுகிறோம். ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், கோழைத்தனமாக திட்டமிட்டு எங்களை வெளியேற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகிறார். நான் பேசுவதை நேரலை செய்ய தெம்பு, திராணி உள்ளதா?..நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து வெளிநடப்பு செய்யும்போது நாங்கள் உங்களை கிண்டலடித்தோமா? இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி அதன்பிறகு உங்களால் எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது. அகம்பாவத்தில் ஆடுகிறார்கள்; காவி உடை அணிந்து வரவில்லை என்று எங்களை விமர்சிக்கிறார். அவருக்கு பேச தகுதி உள்ளதா?." என்று தெரிவித்துள்ளார்.

More