Watch Video: தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஆட்டம் கண்ட ரயில் பெட்டிகள்
தைவானில் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கி.மீ., தொலைவில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியிருந்தது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ரயில் நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் பெட்டிகள் குழுங்கின. நிலநடுக்கத்தின் போது பதிவான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைராகி வருகின்றன.