தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Savukku Shankar: ‘ப்ளீஸ்..தொடாதீங்க சார்..வலி தாங்க முடியவில்லை’ - சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி!

Savukku Shankar: ‘ப்ளீஸ்..தொடாதீங்க சார்..வலி தாங்க முடியவில்லை’ - சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி!

May 09, 2024 12:45 PM IST Karthikeyan S
May 09, 2024 12:45 PM IST
  • பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், திருச்சியை சேர்ந்த பெண் காவலர் ஒருவரும் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக திருச்சி போலீசாரும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இதுதொடர்பான ஆவணங்களை கோவை சென்று திருச்சி போலீசார் சவுக்கு சங்கரிடம் கொடுத்துள்ளனர். இதனிடையே சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாகவும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் இன்று காலை சவுக்கு சங்கர் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More