Russian MiG-31 Fighter Jet Crash: நடுவானில் வெடித்து தீப்பந்து போல் பறந்து ஏரியில் விழுந்த ரஷ்ய போர் விமானம்
- ரஷ்யாவின் போர் விமானமான MiG-31 வானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென வெடித்து ஏரியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் நெருப்பு பந்து போல் மாறி தீப்பிடித்த காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. பால்டிக் கடற்கரை பகுதியில் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாட்டு விமானங்கள் ரஷ்ய விமானத்தை இடைமறித்த பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ரஷ்ய விமானம் டிரான்ஸ்பாண்டர் சிக்னலை சர்வதேச வான்வெளியில் பறந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் வடக்கு முர்மன்ஸ்க் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவின் ரிஸ்-குபா தீவு பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் விமானம் வெடிப்பானது நிகழ்ந்துள்ளது. இரண்டு ஜெட் எஞ்சின்கள் கொண்ட விமானம் ஒன்று பயிற்சியின்போது வெடித்துள்ளது. விமானத்தை இயக்கிய பைலட் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகில் உள்ள ஏரியில் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பைலட்கள் பத்திரமாக தப்பியதாக ஜெட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் இந்த ஜெட் வெடித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. MiG-31 போர் விமானம் இரண்டு பேர் பயணிக்ககூடியதாகவும், அனைத்து வானிலை சூழ்நிலைகளிலும், நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதில் ஆறு பேரல்கள் கொண்ட 23MM பெரிய துப்பாக்கி\யும் உள்ளது. இந்த விமானத்தில் வானில் இருந்து நிலப்பரப்புக்கும், வானில் பயணிக்கும் ஏவுகணைகளையும் எடுத்து செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது