Tamil News  /  Video Gallery  /  President Droupadi Murmu Pays Tribute The Queen

Video: பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திரெளபதி முர்மு

18 September 2022, 20:11 IST Karthikeyan S
18 September 2022, 20:11 IST

பிரிட்டனின் நீண்ட கால ராணியான இரண்டாம் எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் கடந்த 8ஆம் தேதி இரவு காலமானார். அதைத் தொடர்ந்து அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து 13ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கடந்த 14ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா சார்பில் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்ட குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லண்டன் சென்றடைந்தார். இந்நிலையில் இன்று வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ராணி எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து இரங்கல் குறிப்பிலும் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து வந்த தலைவர்களுக்காக மன்னர் மூன்றாம் சார்லஸ் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிய்ல திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

More