Tamil News  /  Video Gallery  /  Pfi Kerala Bandh: Petrol Bombs Hurled At Rss Office, Stones Pelted

Video: என்ஐஏ சோதனை - கேரளாவில் பந்த், அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

23 September 2022, 16:29 IST Karthikeyan S
23 September 2022, 16:29 IST
  • நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தியதோடு 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனா். ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் நடந்த என்ஐஏ சோதனை எனக்கூறி, எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பு முழுகடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் பிஎஃப்ஐ அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். கடையடைப்பு போராட்டத்தின் போது திருவனந்தபுரத்தில் மாநில அரசின் கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஒன்றும், தனியாா் ஆட்டோ ஒன்றும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பிஎஃப்ஐ நிர்வாகிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனா். கன்னூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். 
More