பழனி முருகனுக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்! மேளதாளத்துடன் கிரிவலம் சென்று நேர்த்திக்கடன்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பழனி முருகனுக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்! மேளதாளத்துடன் கிரிவலம் சென்று நேர்த்திக்கடன்

பழனி முருகனுக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்! மேளதாளத்துடன் கிரிவலம் சென்று நேர்த்திக்கடன்

Updated Apr 13, 2025 04:20 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Apr 13, 2025 04:20 PM IST

  • பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் விழாவாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இருந்து வந்த முருக பக்தர்கள் உடல் முழுவதும் கத்தியை குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் 10 அடி நீளம் கொண்ட அலகை முகத்தில் கொட்டிக்கொண்டும், உடல் முழுவதும் கத்தியை குத்திக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் கிரிவலம் வந்தது காண்போ மெய்சிலிர்க்க வைத்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் பலரும் காவடி எடுத்து கிரிவலம் வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். மலைக் கோயிலில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

More